கடலூர் பண்ருட்டியை அடுத்த வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பாக்கியலட்சுமி அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம்- வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில் இன்று துவங்கிய பொதுத்தேர்வை ஒட்டி, பண்ருட்டியில் உள்ள சுப்ராயலு செட்டியார் அரசு பெண்கள் மேநிலைப்பள்ளியில் தேர்வுமையத்திற்கு தனது சகோதரர் ஆனந்தபாபுவுடன் மொபட்டில் செல்லும் போது அங்குச்செட்டிப்பாளையத்தில் எதிரே வந்த மற்றொரு பைக்கில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவியும், அவரது சகோதரரும் காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் சொல்லி வரவழைத்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.பலத்தக் காயம் ஏற்பட்டிருந்ததால், பின்னர் அங்கிருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்த நிலையில் மாணவி தேர்வெழுத வேண்டும் அனுமதிக்கவேண்டும் என மருத்துவ உதவியாளர் மலர் என்பவரிடம் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் விருப்பம் குறித்து மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் மூலம் மாணவி மருத்துவமனையிலேயே தேர்வெழுத சிறப்பு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மாணவி மருத்துவமனையிலேயே தேர்வெழுதினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக