சிவகங்கை, செப். 3: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை வட்டாரக் கிளைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில், தலைவராக எஸ். பால்டேவிட் ரொசாரியோ, துணைத் தலைவர்களாக பி.பிச்சம்மாள், எம். சோணைமுத்து, எஸ். வேணுகோபால், செயலராக மு. குமரேசன், துணைச் செயலர்களாக எஸ். பஞ்சுராஜ், சோம. அசோக்பாரதி, எஸ். மாலா, பொருளாளராக கே.ஆர். வெற்றிவேந்தன், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்களாக எம்.ஜான்போஸ்கோ, எம். ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையர்களாக வி. சிங்கராயர், வி. ரவி ஆகியோர் செயல்பட்டனர். மாநிலத் துணைத் தலைவர் வே. நீலமேகம், மாவட்டப் பொருளாளர் முக. புரட்சித்தம்பி, முன்னாள் வட்டாரச் செயலர் சங்கர், நகர் செயலர் சாஸ்தா சுந்தரம் ஆகியோர் புதிய நிர்வாகிகளைப் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக