சிவகங்கை: தேர்தல் பயிற்சிக்காக அனைவரும் வர வேண்டும் என உத்தரவு போட்டு விட்டு சிவகங்கை நகராட்சி ஆணையர் பயிற்சி வகுப்புக்கு வராததால் ஆசிரியர்கள் கடும் கோபத்துடன் நீண்ட நேரம் காத்திரு்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.
சிவகங்கை நகராட்சி ஆணையர், தேர்தல் பயிற்சி வகுப்புக்கு சுற்று வட்டார ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று இன்றுகாலை பயிற்சி நடைபெறுவதாக இருந்த மையத்திற்கு ஆசிரியர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர்.
ஆனால் பயிற்சி மையம் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் கடும் வெயிலில் வெளியில் காத்திருந்தனர். 2 மணி நேரத்திர்கும் மேலாக காத்திருந்த ஆசிரியர்கள் யாரையும் காணாததால் கடும் கோபமடைந்தனர். இதற்கு மேலும் வெயிலில் காத்திருக்க முடியாது என்று முடிவு செய்தஅவர்கள் கிளம்பிச் செல்ல ஆரம்பித்தனர்.
கொஞ்சம் பேர் மட்டும் இன்னும் சிறிது நேரம் காத்திருந்து பார்க்கலாம் என இருந்தனர்.இந்த நிலையில் நீண்ட நேர தாமதத்திற்குப் பின்னர் ஒரு வழியாக வந்து சேர்ந்தார் ஆணையர். அதன் பின்னர் மிச்சம் இருந்தவர்களை மட்டும் வைத்து வகுப்பு நடத்தினார் ஆணையர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக