பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/09/2011

ராணுவப் பள்ளியில் ஆசிரியர்கள்-

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ராணுவத்தில் பணி புரிந்து வந்த பல்வேறு அதிகாரிகளின் குழந்தைகளைச் சேர்ப்பதில் சிரமங்கள் இருந்தன. அதிலும் 1962 முதல் 1973 வரை இந்திய ராணுவம் பல மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் ராணுவத்தில் பணி புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல கல்வி தருவதற்கான தேவைகளும் அதிகரித்தன.
இதன் காரணமாக இந்திய ராணுவத்தால் நிர்வகிக்கப்படும் பொதுப் பள்ளிகளைத் துவக்குவதற்கான முயற்சிகள் எழுந்தன. தற்போது நாட்டின் பல பகுதிகளில் இந்திய ராணுவத்தின் பப்ளிக் ஸ்கூல்கள் இயங்கி வருகின்றன. புது டில்லியில் இருக்கும் ஆர்மி பப்ளிக் ஸ்கூலில் ஆசிரியர்களைப் பணியில் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள் என்னென்ன: இந்திய ராணுவ பொதுப் பள்ளியில் ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.04.2012 அன்று 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ., சாப்டர் IX-யின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பி.எட்., படிப்பை இவர்கள் முடித்திருக்க வேண்டும்.
முதுநிலை ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது இதற்கு இணையான உயர் படிப்பை குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். டி.ஜி.டி., மற்றும் பி.ஆர்.டி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்பை அல்லது உயர் படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
இதர விபரங்கள்:ஆர்மி பப்ளிக் ஸ்கூலின் ஆசிரியர் காலி இடங்கள் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.165/க்கான டி.டி.,யை தொடர்புடைய Army Public School என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். எந்தப் பள்ளிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறோமோ அந்தப் பள்ளிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும் இதர இணைப்புகளையும் இணைத்து 15.10.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். பணியிட விபரங்கள், பள்ளிகளின் விபரங்கள் பற்றிய முழுமையான தகவல்களை அறிய பின் வரும் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
இணையதள முகவரி: www.awes.nic.in/
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.10.2011
 Source: Kalvimalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக