சமச்சீர் பாடப்புத்தகத்தில் மாணவ, மாணவியருக்கு ஏற்ற வகையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களின் ஆய்வுக் கூட்டம் துவங்கியுள்ளது.
இந்த கல்வியாண்டில் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பாடத்திட்டத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்ள மாற்றம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பாடப்புத்தகங்கள் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளுக்கு ஏற்ப 3 பகுதிகளாக பிரிக்கப்பட உள்ளது. அந்தந்த தேர்வுக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும் மாணவர்கள் எடுத்துச் செல்லலாம். இதனால் புத்தக சுமை பெரும்பாலும் குறையும்.
இது குறித்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) ஸ்ரீதேவி கூறுகையில், சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆசிரிய, ஆசிரியைகள் 25, 28 மற்றும் 29ம் தேதிகளில் ஆய்வு செய்கின்றனர்.
இதற்காக 6-8ம் வகுப்பு வரையில் ஒவ்வொரு பாடத்திற்கும் 40 ஆசிரியர்களும் 9-10ம் வகுப்பு வரையிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 40 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பாடத்தில் சேர்த்தல், நீக்கம் தவிர மாணவர்களுக்கான பயிற்சி, திட்டப்பணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக