வீட்டுப்பாடத்தை குறைக்க வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கை பற்றி பரிசீலித்து முடிவெடுக்கும்படி கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சத்திய சந்திரன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மாணவர்களுக்கு மன உளைச்சலை குறைப்பதற்காக புத்தக சுமையை குறைப்பதோடு வீட்டுப் பாடத்தையும் அதிகமாகக் கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசு சட்டம் இயற்றியது.
இதை தமிழக பள்ளிகளில் பின்பற்றும்படி அரசுக்கு மனு கொடுத்தேன். அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர், மனுதாரரின் கோரிக்கை பற்றி பரிசீலித்து முடிவெடுக்கும்படி கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக