சென்னை : "விவசாயக் கல்லூரியில் பேராசிரியராகப் பதவி உயர்வு அளிக்க, விவசாயத் துறையில் பணியாற்றிய ஆண்டுகளைக் கணக்கிட வேண்டும் என, புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது செல்லும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விவசாயத் துறையில் அதிகாரிகளாகப் பணியாற்றிய சிலர், காரைக்காலில் உள்ள ஜவகர்லால் நேரு விவசாயக் கல்லூரியில், உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவி உயர்வுக்கு, விவசாயத் துறையில் பணியாற்றிய காலத்தையும் கணக்கிட வேண்டும் என, புதுச்சேரி அரசு 2005ம் ஆண்டு, ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. இந்த அரசாணையால் பாதிக்கப்படும் பேராசிரியர்கள், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ஐகோர்ட், புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. 2009ம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. பேராசிரியராக பதவி உயர்வு பெற வேண்டும் என்றால், உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து தான் கணக்கிட வேண்டும் என்றும், புதுச்சேரி அரசில் விவசாய அதிகாரிகளாகப் பணியாற்றியதை எல்லாம் கணக்கில் கொள்ளக் கூடாது என்றும், வழக்கறிஞர் வி.எம்.ஜி.ராமக்கண்ணன் வாதிட்டார்.
மனுக்களை விசாரித்த "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தற்போது, உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றுபவர்களின் கடந்த காலப் பணிகளைக் (விவசாய அதிகாரிகள்) கணக்கிட்டால், ரிட் மனுக்கள் தாக்கல் செய்தவர்களை விட, சீனியர்களாக ஆகி விடுவர். இணைப் பேராசிரியராக குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் அல்லது கல்லூரியிலோ, பல்கலையிலோ 17 ஆண்டுகள் பணியாற்றியவர்களாக இருந்தால், அவர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வு கிடைக்கும் என திட்டத்தில் உள்ளது. இந்த தகுதிகளை, மனுதாரர்கள் பெற்றவர்களாக இல்லை. எனவே, உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு முன்பாக, அவர்கள் பணியாற்றிய நாட்களைக் கணக்கிடுவது இயலாது. மனுதாரர்களின் கடந்த காலப் பணி நாட்களைக் கணக்கிட முடியாது என, தனி நீதிபதி சரியாக முடிவெடுத்துள்ளார். இதில், எந்தக் குறைபாடும் இல்லை. அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக