சென்னை : 2012-13 கல்வியாண்டுக்கான பாடப் புத்தகத் தயாரிப்புப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் துவக்கிவிட்டனர்.
சமச்சீர் பாடப் புத்தகங்களில் சேர்க்க மற்றும் நீக்க வேண்டிய பகுதிகள் குறித்த பரிந்துரைகளை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பாடப் புத்தகங்களில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, புத்தகங்களை அச்சிடுவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் டிசம்பர் மாதத்துக்குள் சி.டி.க்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சமச்சீர் பாடப் புத்தகங்கள் தரமற்றவையாக உள்ளன என்று கூறி பழைய பாடத் திட்டத்தையே இந்த ஆண்டு பின்பற்ற தமிழக அரசு முடிவு செய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த ஆண்டே சமச்சீர் கல்வி அமலுக்கு வந்தது.
மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க வரும் கல்வியாண்டு முதல் முப்பருவ புத்தக முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரித்து அச்சிடப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றது. அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்கள் மிகுந்த கவனத்தோடு தயாரிக்கப்பட உள்ளன.
வரும் கல்வியாண்டில் இப்போதுள்ள சமச்சீர் பாடப் புத்தகங்களே பின்பற்றப்படும். இந்தப் புத்தகங்களில் நீக்க வேண்டிய மற்றும் சேர்க்க வேண்டிய பகுதிகள் தொடர்பாக பரிந்துரைகளை அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 முதல் 60 ஆசிரியர்கள் வரை ஈடுபடுத்தவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும். 60-க்கும் மேற்பட்ட பாடங்கள் தொடர்பாக அறிக்கைகள் பெறப்படும்.
அதன்பிறகு, அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து புத்தகங்களை எழுதியவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். பாடப் புத்தகங்களில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் புத்தகங்களின் சி.டி.க்கள் டிசம்பர் மாதத்துக்குள் ஒப்படைக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக