சென்னை: தமிழகத்தில் நம்பிக்கை அமைப்பாகவும், எதையும் நம்பாமல் தன் அறிவை மட்டுமே மூலதனமாக கொண்டு தன் வாழ்வை உயர்த்திக்கொள்ளும் எண்ணம் கொண்ட ஒரு தேர்வாக நம்பிக்கையில் இருந்து வந்தது டி.என்.பி.எஸ்.சி., ( தமிழக அரசு பணி தேர்வாணையம் . இந்த அமைப்பின் கீழ் பணியாளர் நியமனத்தில் லஞ்சம் வாங்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து இந்த ஆணைய தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் 13 பேர் வீடுகளில் காலையில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு படை போலீசார் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Yahoo! தினமலர்
இந்த தேர்வு மூலம் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பி இருந்து ஏமாந்தவர்கள் தான் பல பேர் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு பதவிக்கு 30 முதல் 40 லட்சம் வரை லஞ்சமாக பேரம் பேசப்பட்டு வாங்கி வந்துள்ளனர். இந்த ரெய்டு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த கமிஷன் கடந்த 1930 முதல் 80 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இக்கமிஷன் மூலம் குரூப்- 1 . குரூப்- 2 , குரூப் - 3 , குரூப்- 4 என அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இந்த தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கீழ் வரும் ஊழியர்கள் நியமனத்திற்குள் வருவர். இதன்படி குரூப்- 1ன் கீழ் ஆர்.டி.ஓ., டெப்டி கலெக்டர், டெப்டி ரிஜிஸ்தார் (கோ.ஆப்), பத்திரப்பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், டிவிஷன் மானேஜர், ஆகியோர் அடங்குவர். குரூப்- 2 ன் கீழ் கண்காணிப்பாளர்ள், மானேஜர் பதவிகள் என அடங்கும். குரூப் -3 எழுத்தர் பொறுப்பு, குரூப்- 4, வி.ஏ.ஓ.,க்கள் அலுவலக உதவியாளர்கள்.
யார்- யார் வீடுகளில் ரெய்டு ? : இந்த ஆணையத்தின் தலைவர் செல்லமுத்து( சென்னை பாடி), எம்.ராமசாமி, ( புரசைவாக்கம்) டி.சங்கரலிங்கம் (கீழ்பாக்) , கே.லட்சுமணன்(கீழ்பாக்), எம்ஷோபினி (கொரட்டூர்) , எஸ்.சேவியர்ராஜா( கீழ்பாக்கம்) , கே.எம்,ரவி( ராயப்பேட்டை) , ஜி.சண்முகமுருகன், கே.கே.,ராஜா, எஸ்.பன்னீர்செல்வம்( திருச்சி) அண்ணாமலைநகர்) , ரத்னாசபாபதி ( சென்னை) , பி.பெருமாள்சாமி( முகப்பேர்) , டி.குப்புச்சாமி( கோபாலபுரம்) , செல்வமணி (நந்தனம்) , ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது.
நேற்று அவசரமாக பத்திரிகைக்கு வந்த மறுப்பு செய்தி: டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் பணம் பெற்று பதவிகள் வழங்கப்படுவதாக வதந்தி பரப்பப்படுகிறது என்றும் ""தகுதி அடிப்படையில் தான் விண்ணப்பதாரர்களுக்கு பணி வாய்ப்பு தரப்படுகிறது,'' என்றும் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) இணைச் செயலர் மைக்கில் ஜெரார்டு தெரிவித்து உள்ளார். இந்த செய்தி இன்று காலை அனைத்து நாளிதழ்களிலும் பிரசுரமாகி யிருக்கிறது.காலையில் ரெய்டு துவங்கியிருக்கிறது,.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் : கடந்த பிப்ரவரி 20ம் தேதி, வி.ஏ.ஓ., பணியிடத்திற்கு எழுத்துத் நடந்தது. இத்தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான தேர்வு பட்டியல், கடந்த மாதம் 13ம் தேதி வெளியானது. இந்நிலையில், தேர்வு பெற்றவர்களிடம், பணியிடங்களை நிரப்ப பண வசூல் நடப்பதாக செய்திகள் வருகின்றன.
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் தான், விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே, இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். டி.என்.பி.எஸ்.சி., பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மைக்கில் ஜெரார்டு தெரிவித்து உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக