ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் பங்கேற்று பணியிட மாறுதல் பெற்றுள்ள ஆசிரியர்கள், அவர்களுக்கு பதில் ஆசிரியர்கள் வராததால் பணியில் இருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
கலந்தாய்வில் பங்கேற்று நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பணியிட மாறுதல் உத்தரவு பெற்றனர். ஆனால், தங்களது பணியிடங்களை நிரப்ப மாற்று ஆசிரியர்கள் வராததால், பல ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற பணியிடத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
ஈராசிரியர் துவக்கப்பள்ளிகளில் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் யாரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பினால் மட்டுமே கலந்தாய்வு மூலம் மாறுதல் உத்தரவு பெற்றவர்களை பள்ளியில் இருந்து விடுவிக்க முடியும்.
தமிழக அரசு, புதிதாக 1,734 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பணி முடிவடைந்து புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால்தான் பணியிட மாறுதல் பெற்றவர்கள், தாங்கள் கோரிப் பெற்ற பள்ளிக்கு பணிக்குச் செல்ல இயலும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக