நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திரு வாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத் தம் உள்ள 1080 வாக்குசாவடி மையங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளஅலுவலர்களின் பெயர், பதவி, புகைப்ப டம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் கணினியில்பதிவு செய்யும் பணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
பணியை கலெக்டர் நடராஜன் பார்வையிட்ட பின் கூறு கையில், மாவட்டத்தில் உள்ள 1080 வாக்குசாவடி மையங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் தலை மை அலுவலர் மற்றும் வா க்கு பதிவு அலுவலர்கள் நிலை 1, 2, 3 என மொத்தம் 5200 அலுவலர்களுக்கானசுய விவரங்கள் அனை த்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் எந்தவாக்குசா வடி மையங்களில் பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறித்து கணினி மூலம் அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருள் கொண்டு குலுக்கல் முறையில்தேர்வு செய்யப்படவுள்ளனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக