பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்று மத்திய அரசு அறிவுரரை வழங்கியுள்ளது.
நாட்டின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
அதன்படி, நவம்பர் 11ம் தேதியன்று பள்ளிகளில் தேசிய கல்வி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து அரசு, நிதியுதவி பெறும் தொடக்க, நநிலைப் பள்ளிகளுக்கு மத்திய அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
அந்த சுற்றறிக்கையில், பள்ளி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் எதற்காகவும் அடிக்கவோ, திட்டவோ கூடாது. அவர்களின் மனம் நோகும்படி நடந்து கொள்ளக் கூடாது. மாணவர்களின் மனம் அறிந்து, அவர்களுக்குப் புரியும்படி பாடம் நடத்த வேண்டும்.
வினாத்தாள் எளிமையாக இருக்க வேண்டும். எந்த ஒரு மாணவனையும் திட்டமிட்டு தேர்வில் தோல்வி அடையச் செய்யக் கூடாது. மாணவர்களை சாதி, மத பொருளாதார அடிப்படையில் பாகுபடுத்தக் கூடாது. மாணவர் சேர்க்கைக்கு வரும் குழந்தைகளை எந்தக் காரணம் கொண்டும் நிராகரிக்கக் கூடாது. பள்ளியில் இருந்து நீக்கவும் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக