பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

மின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெறலாம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/15/2014

இயக்கநிறுவனர் மாஸ்டர் இராமுண்ணி இலட்சியப் பாதையில் பயணம்செல்ல

மாஸ்டர் இராமுண்ணி அவர்களும், பெருந்தலைவர் காமராசர் அவர்களும் சுதந்திரப்போராட்ட வீரர்கள். ஒருவரை ஒருவர் பெரிதும் மதித்த ஒப்பற்ற தலைவர்கள்.அந்தத் தலைவர்களின் பிறந்த நாட்களையொட்டி ஒருவேண்டுகோள் தமிழ்நாட்டின் ஆசிரியப்பேரினமே! கல்விநலனும், ஆசிரியர்நலனும் ஒன்றோடுஒன்று பின்னிப்பிணைந்தவை.கல்வி இல்லாவிட்டால் ஆசிரியர்களும் இல்லை. இதை நன்கு உணர்ந்தவர்கள் நாம்.கடந்த காலங்களில் கல்விக்கு ஆபத்து ஏற்பட்டபோதும், ஆசிரியர் நலன்கள் பாதிக்கப்பட்ட போதும் நமது ஒன்றுபட்ட சக்தியின் மூலமாக அவற்றை முறியடித்து வரலாறு படைத்தவர்கள் நாம். இதுவரை நாம்பெற்ற வெற்றிகளெல்லாம் எவருடைய கருணை யினாலும், தயவினாலும் அல்ல. நமது ஒற்றுமையால்... நமதுபோராட்டத்தால்... நமது தியாகங்களால்...! இன்று தமிழகஅரசின் நடவடிக்கைகளால் ஆரம்பக்கல்விக்கும், ஆசிரியர் நலன்களுக்கும் ஒருசேர ஆபத்துக்கள் உருவாகியுள்ளன இந்த ஆபத்தான சூழ்நிலையில் இன்று நம்முன் உள்ளகடமைகள் என்ன?

 இதோ நேற்றையவரலாறு: பாடல் 3 பாடியோர்:எஸ்,நாட்ராயன்,என்.நளினி,ஏ.ஓ.நாராயணசாமி+குழுவினர்

 பேரணி முழக்கம்: ஒன்றுபடுவோம், போராடுவோம்
 போராடுவோம், வெற்றிபெறுவோம்
வெற்றிகிட்டும்வரை போராடுவோம்
இறுதிவெற்றி நமதே!
 பாடல்
 ஒன்று படுவோம் போரா டுவோம் போரா டுவோம் வெற்றி பெறுவோம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறை கூவலிது தோழர்களே! வீரம் செறிந்த போராட்ட களத்தில்
 வெற்றிக் கொடி நாட்ட வாருங்களே! ( ஒன்று படுவோம்... )
அனைத்து நிலையிலும் பிரிந்து பிரிந்துநாம் அன்று சந்தித்த தென்னவோ? நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதைக்குமே
நேர்ந்த இழப்புக்கள் கொஞ்சமோ? ( ஒன்று படுவோம்... )
இந்தி யாவிலே குறைந்த ஊதியம் என்ற அவலநிலை மாற்றினோம்
முன்னுரி மைப்படி வேலை வாய்ப்பெனப்
 புதிய சரித்திரம் ஆக்கினோம். ( ஒன்று படுவோம்... )
பெற்ற வெற்றிகள் பறிக்கப் படுவதை மீண்டும் அனுமதிக்க லாகுமா?
உற்ற தோழனே உரிமை காத்திட
உரத்து முழங்கிநீ ஓடிவா! ( ஒன்று படுவோம்... )
(இன்றும் பொருந்துகின்ற இந்த அறைகூவல் உங்கள் பரிசீலனைக்கு)