தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
கல்வியைக் காப்போம்பிரச்சாரப் பயணப் பாடல்கள்(2000)
பாடியவர்கள் : என்.நளினி, எஸ்.நாட்ராயன்
இசை: கோபி.ஜே.பி.தியாகராஜன்
பாடல்கள், உரைவீச்சு, இயக்கம்
---------------------செ.நடேசன் -----------------------------------
ஒருசமுதாயத்தின் வாழ்வுக்கும், ஒருநாட்டின் முன்னேற்றத்திற்கும் கல்விதான் அடித்தளமாகும். தொழில்வளர்ச்சியும், உற்பத்திப்பெருக்கமும், வறுமைஒழிப்பும், சமத்துவஉணர்வும் கல்வியினால்தான் சாத்தியமாகும். ஒருநாட்டின் ஜனநாயகச் செயல்பாடுகள் அந்தநாட்டு மக்களின் கல்விஅறிவைப் பொருத்தே அமையும். அனைத்துமக்களின் நலன்களையும் காக்கும் ஜனநாயகச் செயல்பாடுகளில் மக்கள் அறிவார்ந்தமுறையிலே பங்கேற்கவும், அவரவர் உரிமையைக் காத்துக்கொள்ளவும், பொதுப்பணியாற்றவும் ஒவ்வொருவரும் பள்ளிக்கல்வியாவது பெற்றிருக்க வேண்டும். இது நிறைவேற வேண்டுமானால்....
பாடல் 4 பாடியோர்: எஸ்.நாட்ராயன், என்.நளினி
கல்விவெள்ளம் தமிழ்நாட்டில் கரைபுரண்டு ஓடணும்
பள்ளியில்லா ஊர்களிங்கே இல்லைஎன்றே ஆகணும்
கர்மவீரர் காமராசர் திட்ட மிட்டாரே
ஊர்கள்தோறும் பள்ளிதிறக்க ஆணையிட்டாரே!
(கல்விவெள்ளம்)
எழுதப்படிக்கத் தெரியாத ஏழைக் குழந்தைக
எல்லாரையும் பள்ளிகூடம் போக வைக்கவே
மதியஉணவுத் திட்டமிங்கே அறிமுக மாச்சு
கதியில்லாத குழந்தைகளும் கல்வி பெறலாச்சு.
வதவதன்னு குழந்தைக ஒருவகுப்பி லிருந்தா
விதவிதமாப் பாடங்களப் படிக்க முடியுமா?
இருபது பேர்படிப்ப தற்கே ஓரா சிரியர்
இருப்பதுதா பொருத்தமின்னு விதிஉ ருவாச்சு
மாணவர்கள் இருபதுக்கே ஓரா சிரியர்
முப்பத்தாறு ஐம்பத்தாறு எழுபத் தாறுக்கோ
இரண்டு,மூன்று, நான்கெனவே தொண்ணூத் தாறுக்கு
ஆசிரியர் ஐந்துஎன நியமன மாச்சே!
(கல்விவெள்ளம்)
அறுபதுகளில் துவங்குச்சம்மா கல்விப் புரட்சி
சுறுசுறுப்பாய் நிகழ்ந்ததம்மா கல்வி வளர்ச்சி
மறுமலர்ச்சி தமிழகத்தில் கல்வி யினாலே
உறுதியாக அடித்தளந்தான் உருவா கியதே!
(கல்விவெள்ளம்)
(2000-டிசம்பர்-கல்விப்பாதுகாப்புப் பிரச்சாரப்பயணத்தில் இடம்பெற்றது)
கல்வியைக் காப்போம்பிரச்சாரப் பயணப் பாடல்கள்(2000)
பாடியவர்கள் : என்.நளினி, எஸ்.நாட்ராயன்
இசை: கோபி.ஜே.பி.தியாகராஜன்
பாடல்கள், உரைவீச்சு, இயக்கம்
---------------------செ.நடேசன் -----------------------------------
ஒருசமுதாயத்தின் வாழ்வுக்கும், ஒருநாட்டின் முன்னேற்றத்திற்கும் கல்விதான் அடித்தளமாகும். தொழில்வளர்ச்சியும், உற்பத்திப்பெருக்கமும், வறுமைஒழிப்பும், சமத்துவஉணர்வும் கல்வியினால்தான் சாத்தியமாகும். ஒருநாட்டின் ஜனநாயகச் செயல்பாடுகள் அந்தநாட்டு மக்களின் கல்விஅறிவைப் பொருத்தே அமையும். அனைத்துமக்களின் நலன்களையும் காக்கும் ஜனநாயகச் செயல்பாடுகளில் மக்கள் அறிவார்ந்தமுறையிலே பங்கேற்கவும், அவரவர் உரிமையைக் காத்துக்கொள்ளவும், பொதுப்பணியாற்றவும் ஒவ்வொருவரும் பள்ளிக்கல்வியாவது பெற்றிருக்க வேண்டும். இது நிறைவேற வேண்டுமானால்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக