சென்னை: தமிழகத்தில், பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு விரைவில் ஒரு புதிய பரிசு கிடைக்கவுள்ளது.
மதிய உணவுடன் சேர்த்து, குழந்தைகளுக்கு மாம்பழ மில்க் ஷேக் வழங்கப்படவுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, தோட்டக்கலை(அரசு நடத்தும்) தொழிலாளர்கள் மற்றும் ஆவின் தொழிலாளர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில், பள்ளிகளில் மதிய உணவு உண்ணும் குழந்தைகளுக்கு, அதனுடன் சேர்த்து மாம்பழ மில்க் ஷேக்(Mango Milk shake) வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.
முதலமைச்சர் தலைமையில் நடந்த 2 நாள், கலெக்டர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மாநாட்டில் இதை தெரிவித்த முதல்வர், "பள்ளிகளிலிருந்து மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கும் விதமாக, சத்துணவு திட்டம் மேம்படுத்தப்படும் இந்நேரத்தில், தமிழக குழந்தைகளின் சத்துக் குறைபாட்டுப் பிரச்சினையையும் தீர்க்க இந்த அரசு உறுதி கொண்டுள்ளது. எனவேதான் இந்தப் புதிய திட்டம்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக