சிங்கம்புணரி, நவ. 7: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக் கிளையின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்: மாவட்டத் தலைவராக ஆ. முத்துப்பாண்டியன், துணைத் தலைவர்களாக அருள், சண்முகம், ஜீவரத்தினம், மாவட்டச் செயலராக ஜோசப் ரோஸ் இமானுவேல், மாவட்ட துணைச் செயலர்களாக பூசைத்துரை, ரவி, இந்திராகாந்தி, மாவட்டப் பொருளாளராக புரட்சித்தம்பி, மாநிலச் செயற்குழு உறுப்பினராக பாஸ்கரன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக பொன். பால்துரை, ஜான் கென்னடி, வேத ராஜசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தேர்தல் ஆணையராக புதுக்கோட்டை மாவட்டச் செயலர் கருப்பையா, துணை ஆணையராக சிவகுமார் ஆகியோர் பணியாற்றினர். கூட்டத்தில், பல்வேறு மாவட்ட, வட்டார நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்டுள்ள 17(அ), 17(ஆ) ஆகிய ஆணைகளை ரத்து செய்யக் கோரி வரும் 3-ம் தேதி மாவட்ட தலைநகரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்வது, தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டமே தொடரக் கோரி நவம்பர் 25-ல் தில்லியில் நடைபெறும் பேரணியில் மாவட்ட கிளை சார்பாக 15-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஏற்பாடுகளை, சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் வட்டாரக் கிளைகள் கூட்டாக செய்திருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக