ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலியானார்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, குன்னூரை சேர்ந்த வெற்றிவேல் மகன் நாககனி, 13. இவர் அங்குள்ள காமராஜர் நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் நேற்று பள்ளி சென்றார்.பள்ளியின் ஒரு கட்டடத்திலிருந்து, மற்றொரு கட்டடத்திற்கு செல்லும், மின் ஒயர் , இரும்பு கம்பி வழியாக செல்லும்படி அமைக்கப்பட்டிருந்தது. இதில் மழையால் மின்கசிவு இருந்தது. மாணவர் நாககனி, இரும்பு கம்பியை தொட்டுள்ளார். இதில், மின்சாரம் தாக்கி பலியானார். கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக