பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/15/2011

சிங்கம்புணரி பள்ளியில் குழந்தைகள் தின விழா

சிங்கம்புணரி, நவ. 14: சிங்கம்புணரி எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளியில், முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம.அருணகிரி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஜி.செந்தில்குமார், பள்ளி நிர்வாக அலுவலர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார்.விழாவில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குழந்தைகள் மனநல மருத்துவர் விஜயசரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தைகள் பராமரிப்பு, குழந்தைகளை வளர்க்கும் முறை குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.பின்னர் மாணவ, மாணவியரின் மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனப் போட்டி, நாடகங்கள் ஆகியவை நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சிவபுரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தர்ராஜன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன், பள்ளி அறங்காவலர்கள் ராஜமாணிக்கம், குகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் யாஸ்மின் நன்றி கூறினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக