பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/23/2011

ஏப்ரல் 16ம் தேதி துவங்குகிறது 10ம் வகுப்பு பொதுத் தேர்வு

இந்த கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 16ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தினால், வழக்கமாக மார்ச் மாதம் கடைசி வாரத்தில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த கல்வியாண்டில் சற்று தாமதமாக துவங்குகிறது.
தேர்வுத் துறை அனுப்பியுள்ள தேர்வு அட்டவணையை தமிழக அரசு பரிசிலீத்து வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியான நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தவும், மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கவும் ஏற்பட்ட கால தாமதத்தினால், பள்ளிகளில் பாடங்கள் எடுப்பது தாமதமானது. இதனால், தேர்வுத் துறை இயக்ககம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கலவி அலுவலகங்களிடம் ஆலோசனை கேட்டிருந்தது.
அதன்படி, டிசம்பர் இறுதிக்குள் பத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை திருப்புதல் தேர்வுகளை நடத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் இரண்டு வார கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் பரிந்துரையை ஏற்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 3 வார காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி முறையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் முறையாக இந்த கல்வியாண்டில் அறிவியல் செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணமும் ரூ.115 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக