மதுரை:கள்ளர் சீரமைப்புத்துறை துவக்கப் பள்ளிகளை நிர்வகிக்க உதவித் துவக்கக் கல்வி அலுவலர் (ஏ.இ.இ.ஓ.,)பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகள் செயல்படுகின்றன. இத்துறையின் கீழ் 240 துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றை கவனிக்க, இடைநிலை ஆசிரியர் அந்தஸ்தில் 6 மேற்பார்வையாளர்கள் பணியிடம் உள்ளது. இவர்கள் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுவர்.
இப்பணியிடங்களை, சமீபத்தில் உதவிதுவக்கக் கல்வி அலுவலர்கள் பணியிடமாக மாற்றி, அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் பள்ளிக் கல்வித்துறையில் உள்ளது போல 6 சரகங்களாக பிரித்து, இயங்க உள்ளனர். இதற்காக சோழவந்தான், செக்கானூரணி, உசிலம்பட்டி, உத்தமபாளையம், பெரியகுளம், திண்டுக்கல்லில் இந்த அலுவலகங்கள் செயல்படும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில சட்டசெயலாளர் சின்னப்பாண்டி கூறுகையில், ""துவக்கக் கல்வித் துறையில் உள்ளதுபோல, பணியிடத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை அரசு நிறைவேற்றியுள்ளதற்கு நன்றி,'' என்றார்.
Source: Dinamalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக