பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/16/2011

பிளஸ்-2 தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது- தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 இறுதித் தேர்வுகள் 2012 மார்ச் மாதம் 8ம் தேதி தொடங்கி மார்ச் 30ம் தேதி முடிவடைகிறது. தேர்வுகள் அனைத்தும் காலை 10.15 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். இந்தத் தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

தேர்வறையில் மாணவர்கள் கேள்வித்தாளை படித்துப் பார்க்க காலை 10.00 மணி முதல் 10.10 மணி வரை 10 நிமிடங்கள் கால அவகாசம் அளிக்கப்படவுள்ளது.

அதே போல விடைத்தாளில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு காலை 10.10 மணி முதல் 10.15 மணி வரை, 5 நிமிஷங்கள் அவகாசமும் அளிக்கப்படும்.

பிளஸ்-2 தேர்வு கால அட்டவணை:

மார்ச் 8ம் தேதி - தமிழ் முதல் தாள்.

9ம் தேதி - தமிழ் இரண்டாம் தாள்.

12ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.

13ம் தேதி - ஆங்கிலம் இரண்டாம் தாள்.

16ம் தேதி - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்.

19ம் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.

20ம் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

22ம் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.

26ம் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.

28ம் தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு மொழித் தேர்வு, தட்டச்சு தேர்வு.

30ம் தேதி - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.

தேர்வுகள் அனைத்தும் காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும். ஆனால் மாணவ-மாணவிகள் காலை 10 மணிக்கு முன்னதாகவே தேர்வு அறையில் இருக்க வேண்டும். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். 10.10 மணி வரை வினாத்தாள் வாசிக்க நேரம் ஒதுக்கப்படும். 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்கள் எழுத நேரம் ஒதுக்கப்படும்.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 71 பேர் மாணவிகள். 3 லட்சத்து 53 ஆயிரத்து 953 பேர் மாணவர்கள்.

மொத்த மாணவர்களில் செய்முறை தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் 6 லட்சத்து 18 ஆயிரத்து 163 பேர். செய்முறை தேர்வு அல்லாத மாணவ-மாணவிகள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 971 பேர்.

கடந்த வருடம் 7 லட்சத்து 23 ஆயிரத்து 545 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள். இந்த வருடம் அதை விட கூடுதலாக 39 ஆயிரத்து 579 பேர் எழுதுகிறார்கள்.

மாணவ-மாணவிகள் தேர்வு எழுத 2 ஆயிரம் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தனித்தேர்வர்கள் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்:

அதே போல பிளஸ்-2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் சென்னை மண்டல துணை இயக்குனர் ரேவதி ருக்மாங்கதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கூடுதலாக வழங்கப்படும் குறியீட்டு படிவத்தில் (கோடிங் ஷீட்) குண்டூசி மற்றும் ஸ்ட்ராப்லர் பின் பயன்படுத்தாமல் ஜெம்கிளிப்-ஐ மட்டும் உபயோகிக்குமாறு தனித்தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 20ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்ப படிவங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்ப படிவம் மற்றும் குறியீட்டு படிவத்தை மடிக்காமல் நேரடியாக கொடுக்க வேண்டும். கூரியர், பதிவுத்தபால், விரைவுத் தபால் மூலம் மடித்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக