சென்னை : தமிழகம் முழுவதும், 69 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக மாற்றப்பட்டதோடு, மாவட்டக் கல்வி அலுவலர்களாக, 46 பேர், பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில், சமீபத்தில், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களும், இவர்களைத் தொடர்ந்து, 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 19 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 69 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 46 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ளார். சென்னை மாவட்டத்தில், மத்திய சென்னை, வட சென்னை மற்றும் கிழக்கு சென்னை ஆகிய மூன்று மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக இருந்தன. தற்போது இந்த பணியிடங்களில், கிழக்கு சென்னை - சண்முகம், மத்திய சென்னை - கண்ணன், வட சென்னை - சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். தென் சென்னை மாவட்டக் கல்வி அலுவலர் புகழேந்தி, திருச்சிக்கு மாற்றப் பட்டுள்ளார். இவருக்குப் பதில், கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக