தேவகோட்டை: ஒரே பள்ளிக்கு இரண்டு தலைமை ஆசிரியர்கள் இருப்பதால், மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஒன்றியத்தில் சித்தானூர், கொடிக்குளம், களத்தூர், கிளாமலை தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த நான்கு பள்ளிகள் உட்பட தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட எந்த பள்ளிக்கும் நேற்று வரை தலைமையாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே தலைமையாசிரியர்களாக இருந்தவர்களே தொடர்ந்தனர்.
பழைய தலைமையாசிரியரை மாற்றவோ, பதவி இறக்கம் செய்தோ எந்த வித உத்தரவும் இல்லாத நிலையில், நாரணமங்களம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை வளர்மதி, சித்தானூருக்கு கூடுதல் பொறுப்பாக மாறுதல் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று புதிய ஆசிரியை தலைமையாசிரியையாக பணியில் சேர்ந்தார். பழைய தலைமையாசிரியை சூசை மேரியும் தொடர்ந்தார். இதனால், சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டுமில்லாது மற்ற ஆசிரியர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டது.
கல்வித் துறை அலுவலர் கூறியதாவது: பழைய ஆசிரியை பற்றி எந்த உத்தரவும் வரவில்லை. மாவட்ட கல்வி அலுவலரின் எழுத்துப்பூர்வ உத்தரவு வந்து தான், நியமன உத்தரவு போடப்பட்டது. அவருக்கு, மேல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக