பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/02/2012

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவியிறக்கம்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 1,054 நடுநிலைப் பள்ளிகள் கலைக்கப்பட்டு, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால், 700க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு, வேறு வழியில்லாமல், "டிமோஷன்' வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அனைத்துப் பகுதிகளிலும் துவக்கப் பள்ளிகள் துவக்கப்பட்டுவிட்ட நிலையில், துவக்கப் பள்ளிகள் துவக்குவதும், தரம் உயர்த்தப்படுவதும் கணிசமாக குறைந்து விட்டது. இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ், 2009-10ம் கல்வியாண்டில், 200 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. 2010-11ம் கல்வியாண்டில் தரம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்ட, 344 பள்ளிகளும், கடந்த ஜூலையில் தரம் உயர்த்தப்பட்டன. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான, 2011-12க்கு, 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் போது, நடுநிலைப் பள்ளி கலைக்கப்பட்டு, ஐந்தாம் வகுப்பு வரையில் துவக்கப் பள்ளியாகவும், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை உயர்நிலைப் பள்ளியாகவும் பிரிக்கப்படுகிறது. இதனால், அந்த நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் வேறு இடத்துக்கு மாறுதல் பெற வேண்டிய கட்டாயம் உருவாகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, 1,054 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால், 1,054 தலைமை ஆசிரியர்களுக்கு பணியிடம் இல்லாமல் போனது. நடப்பாண்டில், 65 துவக்கப் பள்ளிகள் மட்டுமே நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு, புதிய தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே காலியாக இருந்த இடங்களையும் சேர்த்து, 300க்கும் குறைவானவர்களுக்கே தலைமை ஆசிரியர் பணியிடம் மாறுதலில் வழங்கப்பட்டது.

மீதமுள்ள, 700க்கும் மேற்பட்டோர் மாறுதல் பெற காலிப் பணியிடம் இல்லாததால், வேறு நடுநிலைப் பள்ளிக்கு, பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருந்துவிட்டு, எவ்வித காரணமும் இன்றி, தற்போது வேறு பள்ளிக்கு ஆசிரியராக, "டி பிரமோட்' செய்யப்பட்டதால், இவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.இதனால், தன்னை விட முன்னுரிமை குறைவாக உள்ள தலைமை ஆசிரியர்களிடம், இவர்கள் பணிபுரியும் நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்னைக்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக