விருதுநகர் : நாடு முழுவதுமான பள்ளிகள் கணக்கெடுப்பு பணி முடிவடையாததால், கல்வி மேம்பாட்டுக்கு திட்டமிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில், பள்ளிகள் குறித்து கணக்கெடுக்க, இந்தியா முழுவதும் எட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, இதன்பணி, 2009 செப்., 30 ல் துவங்கியது. பள்ளிகளின் அடிப்படை வசதிகள் கட்டடம், கழிப்பறை, குடி நீர் , ஆசிரியர்கள் விபரம் என அனைத்து விபரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன. இந்த விபரங்களின் அடிப்படையில் தான் , பள்ளிகளை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இதன் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில்,மற்ற மாநிலங்களில் முடியாததால், ஆன் லைனில் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் கல்வி மேம்பாட்டுக்கான திட்டங்களை தீட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, பள்ளிகள் கணக்கெடுப்பு பணிகளை விரைவில் முடிக்க முன் வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக