அங்கன்வாடி குழந்தைகளுக்கு செயல் வழிக்கற்றல் பயிற்சி தர அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஒன்று முதல் 4ம் வகுப்பு வரை செயல் வழிக்கற்றல் அட்டைகள் வழங்கப்பட்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. தற்போது அங்கன்வாடி குழந்தைகளுக்கும் இம்முறையில் பயிற்சி தரப்பட உள்ளது.
வட்டார வளமையங்களில் ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து அலுவலக பணியாளர்கள் இருவருக்கும் இதற்காக பயிற்சி தரப்படும். இவர்கள் மாவட்டத்தில் தேர்வு செய்யயப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று பயிற்சி தருவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக