ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதுவோருக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கவும், ஆலோசனைகள் பெறவும், இரண்டு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பல்வேறு போட்டி எழுத்துத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வினியோகம் செய்யப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் முன்பு ஐசிஆர் படிவமாக வழங்கப்பட்டது. ஆனால், இப்போது இந்த படிவம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு, ஓஎம்ஆர் வடிவத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக் கட்டணம் இதுவரை டிடி மூலம் செலுத்தும் முறை இருந்தது. இந்த ஆண்டு முதல் டிடி முறை ரத்து செய்யப்படுகிறது.
மேலும், போட்டி எழுத்துத் தேர்வு விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கப்படும் வங்கி சலான் மூலம்தான் இனிமேல் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுகள் எழுதுவோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போதும், வங்கி சலான் மூலம் தேர்வுக் கட்டணம் செலுத்தும் போதும் ஏற்படும் சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் 044& 6452 5208, 044&6452 5209 ஆகிய இரண்டு தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தொலைபேசிகள், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை இயங்கும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி சலானில் உள்ள தொலைபேசி எண்கள், சம்மந்தப்பட்ட வங்கிகளுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள மட்டுமே தரப்பட்டுள்ளது. எனவே, போட்டி எழுத்துத் தேர்வு எழுதுவோர் இனிமேல் மேற்கண்ட தொலைபேசி எண்களில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக