பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

4/20/2012

கட்டாய கல்வி சட்டம்:ஐகோர்ட்டில் மனு

சென்னை : கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பாக ஐகோர்ட்டில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த வட்டார மாணவர்களை ஒவ்வொரு பள்ளியும் சேர்க்கலாம் என்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இந்த பட்டியல் உதவும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை ஐகோர்ட் தலைமை நீதிபதி முன் ஏப்ரல் 23ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

2012-13 ஆசிரியர் இடமாறுதல் மாதிரி விண்ணப்பப்படிவம்


4/19/2012

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: இடதுசாரிகள் கோரிக்கை



சென்னை, ஏப். 18: ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவையில் இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை வைத்தன.  இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதம்:  கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): எந்தெந்தப் பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தந்துவிடுகிறேன்.  ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும்போது முழு கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டத்தை காரணம் காட்டி மீண்டும் ஒரு தேர்வை திணிப்பது கூடாது.  மத்திய அரசின் நுழைவுத் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தமிழக அரசு எதிர்த்ததை போலவே இந்த கல்வி உரிமைச் சட்டத்திலும் மீண்டும் ஒரு தேர்வு என்பதை தவிர்த்திட தகுதித் தேர்வை ரத்து செய்ய குரல் கொடுக்க வேண்டும்.  அமைச்சர் என்.ஆர். சிவபதி: உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஆசிரியர் நியமனத்திற்கு கட்டாயக் கல்வி சட்டத்தின்படி தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதை ஏற்று இந்த அரசு நடைமுறைப்படுத்துகிறது.  குணசேகரன் (சிபிஐ): ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவதைத் தவிர்த்து தனியாகப் பயிற்சி தரலாம். பிறகு பதவி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதுதான் சரியாக இருக்கும்.  கே. பாலபாரதி (மார்க்சிஸ்ட்): நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆனால் மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போன்று ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கிடையாது. எனவே, அதை கணக்கில் எடுத்து கொண்டுதான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.  நமது மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் நல்ல பயிற்சி தரப்படுகிறது. மேலும், 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு முறையே கிடையாது. அனைவரும் தேர்ச்சியடைந்தவர்கள் என்று அறிவிக்கப்  படுகிறது. இத்தகையை சூழ்நிலையில் 40 வயதைக் கடந்த ஆசிரியர் பயிற்சி முடித்த இளைஞர்கள் வேலை கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஆனால், இந்த தகுதித் தேர்வு மூலம் அவர்களின் வேலை உரிமை பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய வேதனை குரலை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.  அமைச்சர் சி.வி. சண்முகம்: மற்ற மாநிலங்களிலும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அந்த மாநிலங்களிலும் இந்த தகுதித் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்றுதான் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் வழிகாட்டியுள்ளது.  அந்த வழிகாட்டுதலை மத்திய அரசு, மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அதை ஏற்று இந்த அரசு நடைமுறைப்படுத்துகிறது.  கே. பாலகிருஷ்ணன்: உயிரி வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள், இளங்கலைப் பட்டத்துடன் ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவர்கள் ஆசிரியராகப் பணிபுரிய தகுதியற்றவர்கள் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் என பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே சான்று அளித்துள்ளது.  ஆகவே, ஆசிரியர் தேர்வாணையை உத்தரவை ரத்து செய்து உயிரி வேதியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாழ்வு அளிக்க வேண்டும்.

4/18/2012

14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தொடக்க பள்ளி, இடைநிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 14 ஆயிரத்து 349 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறினார்.சட்டசபையில் இன்று நடந்த பள்ளி கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அவர் மேலும் கூறியதாவது: 100 மாநகராட்சிமற்றும் நகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். 900 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். 22 ஆயிரத்து 400 மாணவ மாணவிகளுக்கு 320 பள்ளிகளில் ஒன்று மற்றும் 6ம் வகுப்பு வகுப்புகளுக்குஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்படும் என்றார். மேலும் அவர்,எட்டு மாவட்டங்களில் மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று போக்குவரத்துவசதி செய்து தரப்படும். நூலகங்கள் மேம்படுத்தப்படும் என்றார்.

district news | ஏ.இ.ஓ., - ஆசிரியர் "கைகலப்பு' சம்பவம் Dinamalar

district news | ஏ.இ.ஓ., - ஆசிரியர் "கைகலப்பு' சம்பவம் Dinamalar

கேலிக்கூத்து! : "பிட்' அடிக்க உதவிய தி.மலை ஜோசப் மெட்ரிக் பள்ளி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக வெற்றி பெற அடாவடி

தேர்வு எழுதிய எல்லா மாணவர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிட் அடிக்க பள்ளி நிர்வாகமே உதவியுள்ளது. பொதுத் தேர்வு முறையையே கேலிக்கூத்தாக்கிய திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டிலேயே, இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை, வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
கல்வித் துறை அதிர்ச்சி: திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடு நடப்பதை, நேற்று முன்தினம், கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, கையும் களவுமாக பிடித்தார். வேலியே பயிரை மேய்ந்தது போல், தலைமை ஆசிரியர்களும், கல்வித் துறை அலுவலகத்தில் பணிபுரிபவர்களுமே, தங்களது பிள்ளைகளுக்காக, இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது, கல்வித் துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மாணவர்களுக்கு, விடைத்தாள் நகல்களை வழங்க இருந்த நிலையில், அவை அனைத்தையும், கலெக்டர் பறிமுதல் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, ஏழு ஆசிரியர்கள் உடனடியாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த பள்ளியில், தேர்வுப் பணிகளை கண்காணிக்க, வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு, தேர்வுத் துறை இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது. பள்ளியில் முறைகேடு நடந்திருப்பதும், இதற்கு பள்ளி நிர்வாகமும் துணை போயிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதால், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
கண்டிப்பாக... இது குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக வட்டாரம் கூறியதாவது: தேர்வுத் துறையின் பரிந்துரை, இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், பள்ளியில் நடந்த முழு விவரங்களும், எங்களுக்கு தெரிய வந்துள்ளது. தேர்வுத் துறை இயக்குனரின் பரிந்துரை அடிப்படையில், மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை கண்டிப்பாக ரத்து செய்வோம். வழக்கமாக, அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என கூறுவோம். ஆனால், மாணவர்களின் நலன் கருதி, அங்கீகாரத்தை ரத்து செய்வதில்லை. இந்த முறை அப்படி கிடையாது. கண்டிப்பாக, தி.மலை பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம். இந்த சம்பவம், கல்வித் துறைக்கு பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களை மாற்ற ஆலோசனை: பள்ளியில், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பாதிக்காமல் இருக்க, வரும் கல்வியாண்டிலேயே, இவர்கள் அனைவரையும், நகரில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்வது குறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகமும், பள்ளிக் கல்வித் துறையும் ஆலோசித்து வருகிறது.
சென்னை வரும் விடைத்தாள்கள்: திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிட் அடிக்க பள்ளி நிர்வாகமே உதவியது குறித்து , தேர்வுத் துறை இயக்குனரகம் கூறியதாவது: ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விடைத்தாள் நகல்களை கலெக்டர் கண்டுபிடித்து, பறிமுதல் செய்துள்ளார். அந்த விடைத்தாள் நகல்களை, மாணவர்கள் பயன்படுத்தவில்லை என்பது, விசாரணையில்தெரியவந்துள்ளது. மேலும், இந்த பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், ஏற்கனவே நிர்ணயித்த விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பாமல், சென்னைக்கு கொண்டுவரப்படும். புதிய ஆசிரியர்கள் குழுவைக் கொண்டு, இந்த விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும். இவ்வாறு, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Yahoo! தினமலர்

4/17/2012

க‌ல்‌‌வி கட்டண சலுகை - வருமான உச்சவரம்வு உயர்வு

பொறியியலபடிப்பிலபடிக்குமமாணவ - மாண‌விகளுக்ககல்விககட்டசலுகைபபெறுவதற்காகுடும்வருமாஉச்வரம்பூ.50,000இருந்தூ.2 லட்சமாஉயர்த்தப்படுவதாக உயர்கல்விததுறஅமைச்சரபழனியப்பன் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர்.
சட்டப்பேரவையில் இ‌ன்று உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் கே‌‌ள்‌வி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து பே‌‌சிய அமைச்சரபழனியப்பன், பொறியியலபடிக்குமமாணவர்களிலகுடும்வருமானமஆண்டுக்கூ.50,000க்கமிகாமலஇருக்குமமாணவர்களுக்காகல்விககட்டணத்தஅரசசெலுத்தி வந்நிலையில், இந்வருமாஉச்சவரம்பை 2 லட்சமாஉயர்த்தி‌ப்படு‌கிறது எ‌ன்றா‌ர்.
வருமகல்வியாண்டிலதமிழகத்திலஉள்ள 51 அரசகல்லூரிகளிலபுதிதாக 299 பாடப்பிரிவுகளதுவக்கப்படுமஎன்றும், இந்பாடப்பிரிவுகளநடத்வரும் 3 ஆண்டுகளில் 841 பேராசிரியர்களபணியமர்த்தப்படுவார்களஎன்றுமகூறினார்.
மேலும், அரசகல்லூரி மாணவர்களமற்றுமபேராசிரியர்களவெளிநாடசென்றஇலவசமாஉயரகல்வி பெறுவதற்காதிட்டமஒன்றஉருவாக்கப்பஉள்ளதாகவும் அமை‌ச்ச‌ர் பழ‌னிய‌ப்ப‌ன் தெரிவித்தா‌ர்.
வருமகல்வியாண்டிலஅரசகல்வி நிறுவனங்களிலபயிலும் 2 லட்சத்து 12,450 மாணவ, மாணவிகளுக்கஇலவசமாமடிக்கணினி வழங்கப்படுமஎன்று அமை‌ச்ச‌ர் கூ‌றினா‌ர்.

4/16/2012

நிர்வாகிகள் தேர்வு

திருமங்கலம் : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருமங்கலம் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ராஜகோபால், செயலாளராக சாந்தி, பொருளாளராக ரோஜா, துணைத்தலைவர்களாக கண்ணன், அய்யனார், அமுதலெட்சுமி, துணைச் செயலாளர்களாக கார்த்திகேயன், தாமரைச்செல்வி, லதா, மாவட்ட துணை செயலாளராக அருள்ஞானராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.

SOURCE: Dinamalar

ஆசிரியர் தகுதித்தேர்வு: அனைவரும் தேர்வு எழுத அனுமதி- அமைச்சர் சிவபதி

சென்னை: சட்டசபையில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி கொண்டு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் சிவபதி. தமிழ்நாட்டில் 66 மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரியில் மனுக்களை வாங்கியவர்கள் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தான் பிரச்னை ஏற்பட்டு வந்தது. முறைப்படி பூர்த்து செய்து விண்ணப்பங்கள் கொடுப்பவர்கள் அனைவரும் தேர்வு எழுத முடியும் என கூறினார்.

4/15/2012

முப்பருவக் கல்விமுறை

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் மதிப்புமிகு தேவராஜன் அவர்களை சந்தித்து 2012-2013ம் கல்வியாண்டு முப்பருவமுறைக்கான பயிற்சிகளை கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு வழங்குவதை தவிர்க்கும் படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

முப்பருவக் கல்விமுறை அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுவதால், ஆசிரியர்களை தயார்படுத்தி பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மே மாதத்தில் பயிற்சிகள் அளிக்கப்படவிருககிறது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளளது.

பெரும்பான்மையான ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்பவர்களாக இருக்கின்றனர். தொலைநிலைக் கல்வி மூலம் B.A., B.Sc., M.A., M.Sc., B.Ed., M.Ed. போன்ற கல்வி பயில்வோருக்கு தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் பணியாற்றுவோர் விடுமுறைக்கு தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க
பயிற்சிகளை ஜூன் 2012 தொடக்கத்தில் நடத்திடவும்
பயிற்சிகள் முழுவதும் நடத்தும் பொறுப்பு SCERT-யிடம் உள்ளதால் அனைத்து பயிற்சிகளையும் திட்டமிட்டு திறமை வாய்ந்த மாநில கருத்தாளர்களை கொண்டு முறையான அறிவிப்பு செய்து பயிற்சிகளை நடத்திடவும்
பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களையும் ஒரே நேரத்தில் அழைத்திடாமல் கற்றல் பணியில் பாதிப்பு ஏற்படாமல் நடத்திடவும்
டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பயிற்சிகளையும் முடிக்கவும்
கேட்டு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து இயக்குனர் திரு. தேவராஜன் அவர்கள் நமது நிர்வாகிகளிடம் கூறியதாவது:
கடந்த வாரம்தான் பயிற்சி தொடர்பான ஆணை வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து மாநில கருத்தாளர் தேர்வில் தாமதம் ஏற்படுகின்றது.
முடிந்த வரை ஏப்ரல் 28க்குள் பயிற்சி அளிக்கப்படும்.
தொடக்கக்கல்வி துறையில் 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாளும் 6,7மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு (பள்ளிக்கல்வித்துறை உட்பட) 2 நாள் மட்டுமே பயிற்சி நடத்தப்பட உள்ளது.
வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் மே விடுமுறையில் இருந்தால் அங்கு நடக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம்
பி.எட். பயிற்சி பட்டறை, பல்கலை கழக தேர்வு எழுதுபவர்கள், தவிர்க்க முடியாத குடும்ப விழாவில் இருப்பவர்கள் ஆகியோர் ஏதாவது ஒரு Batch-ல் கலந்து கொண்டால் போதும்
அடுத்த பயிற்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு நல்ல தகுதி வாய்ந்த கருத்தாளர்களை கொண்டு முறையாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படும்
அனைத்து பயிற்சிகளும் டிசம்பருக்குள் நடத்திட திட்டமிடப்படும்
என்றும் உறுதியளித்துள்ளார்.
-க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.

முப்பருவத்தேர்வு முறை ஆசிரியர்களுக்கு பயிற்சி

முப்பருவத்தேர்வு முறை குறித்து ஆசிரியர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவத்தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் மாணவர்களின் பாடச்சுமை குறைக்கப்படுகிறது. ஒரு பருவத்திற்கான அனைத்து பாடங்களும் ஒரே புத்தகமாக தயாரிக்கப்படுகிறது. ஜூன்-செப்டம்பர் வரை முதல் பருவம். அக்டோபர்-டிசம்பர் வரை இரண்டாம் பருவம். ஜனவரி-ஏப்ரல் மூன்றாம் பருவமாகவும் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இக்கல்வி முறையில் மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தவும், சிந்திக்கும் திறனை வளர்க்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் தனித்திறன்கள் அடிப்படையில் இன்டர்னல் மார்க் 40 வழங்கப்படுகிறது. ஆசிரியர்களே இதை வழங்குவார்கள். மீதம் 60 மார்க் பாடங்களில் இருந்து தேர்வு எழுதி பெறவேண்டும். இத்திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுவதால், ஆசிரியர்களை தயார்படுத்தி பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் இறுதி வாரத்தில் முதற்கட்ட பயிற்சியும், மே முதல் வாரத்தில் இரண்டாம் கட்ட பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலி ஏற்படும் பணியிடங்களில் 3 சதவீதம் பதவி உயர்வு

தொடக்கக் கல்வி துறையில்  பணியாற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலி ஏற்படும் பணியிடங்களில் 3 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கல்வித்துறை முடிவெடுத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணிமூப்பு பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது . இதனால் தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.