பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/01/2012

ஆசிரியர்கள் வெளிப்படுத்தும்அனுபவ உண்மைகள்..!!

நெடும் போராட்டத்தின் பயனாக வந்தது தான் கல்வி உரிமைச் சட்டம். அதில் சில முக் கியமான குறைபாடுகள் இருக்கின்றன. கல்வி தனியார் வியாபாரச் சரக்காக மாற்றப்படுவதைத் தடுப்பதற்கு மாறாக, அதை மறைமுகமாக ஊக்குவிக்கும் வகையிலேயே விதிகள் அமைந் துள்ளன. அந்தக் குறைபாடுகளைக் களைவதற் கான நெடும் போராட்டம் தொடரவேண்டியிருக் கிறது. அதே நேரத்தில், தற்போதைய நிலையில் சட்டம் முறையாகச் செயல்படுவதற்கான முயற் சிகளும் கண்காணிப்புகளும் தேவைப்படுகின்றன.தமிழகத்தில் அரசுப்பள்ளிகள், அரசு நிதி யுதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 5,500 ஆசிரியர்க ளுக்கான கல்வி உரிமைச்சட்ட விழிப்புணர்வு முகாம் ஒன்று சென்னையில் கடந்த வாரம் நடந் திருக்கிறது. இதே போன்ற முகாம்கள் தமிழகத் தில் வேறு சில மையங்களிலும் நடத்தப்பட்டுள் ளன. பாடத் திட்டங்கள், புதிய பயிற்சி முறைகள் போன்றவற்றில் மாற்றம் ஏற்படுகிறபோது ஆசிரி யர்கள் அவ்வப்போது தங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன. கல்வி உரிமைக்கான சட்டம் குறித்த புரித
ல் கல்வி உரிமைக்கான இயக்கங்களில் ஈடுபட்டி ருப்போர், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி களின் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் மிக அவசிய மாகத் தேவைப்படுகிறது. எனவே ஆசிரியர் களுக்காகத் தொடங்கப்பட்டுள்ள இந்த முகாம் கள் வரவேற்கப்பட வேண்டியவை.முகாம்களில் பங்கேற்ற பல ஆசிரியர்கள் தெரிவித்துள்ள தகவல்களும் முக்கியமானவை. உதாரணமாக, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அடித்தட்டுகளுக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைத் தொடர்ந்து பள்ளிக்கு வரவைப்பதற்கே தொடர்ச் சியான பெரும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என்று அவர்கள் கூறியுள்ளனர். பெற்றோர் தங் களது குழந்தைகளுக்கு சீருடை அணிவிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தங்க ளது வேலைகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லை. வீடுவீடாகச் சென்று பேசிவிட்டு வந்தாலும், சில நாட்களுக்கு அந்தக் குழந்தைகள் வருகிறார் கள், பின்னர் வருவதை நிறுத்திக்கொள்கிறார்கள். ஏழைப்பெற்றோர் தங்களது வேலை வாய்ப்பு களுக்காக அடிக்கடி இடம் பெயர்ந்து செல்வ தன் காரணமாகவும் பல குழந்தைகள் பள்ளிக்கு வருவது நின்று போகிறது. இக்குடும்பங்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலே குழந்தைகளை அவர்களது வயதுக்குப் பொருத் தமான வகுப்புகளில் சேர்த்துக்கொண்டாலும் கூட, பல குழந்தைகள் அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்ள முடியாமல் போகிறது.ஆசிரியர்களின் இந்த ஈடுபாடு பாராட்டத் தக் கது. அதேவேளையில் முகாம்களில் வெளிப்பட் டுள்ள இந்தத் தகவல்கள், சட்டம் மட்டும் போதாது, அதை முழுமையாகச் செயல்படுத்த வேண்டுமானால் இப்படிப்பட்ட குழந்தைகள் மனம் விரும்பி பள்ளிக்கு வரச்செய்வதற்கான இணக்கமான சூழல்கள் ஏற்படுத்தப்பட்டாக வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. அதே போல, வறிய குடும்பங்கள் தங்களது பிழைப்புக் காக வேறு இடங்களுக்குப் புலம்பெயரத் தேவை யில்லை என்ற நிலைமையை உருவாக்காமல் அவர்களது குழந்தைகள் பள்ளியிலிருந்து விடு படுவதைத் தடுக்க முடியாது என் பதையும் இது எடுத்துரைக்கிறது. அரசின் பொறுப்பு சட்டத் தோடு நின்று விடவில்லை. மக்களின் வாழ்வா தாரத்தை உறுதிப்படுத்துவதோடும் இணைந்தி ருக்கிறது. அப்படிப்பட்ட ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை வலியுறுத்துகிற இயக்க மாகவும் கல்வி உரிமைச் சட்டத்திற்கான இயக் கம் வளர்ச்சி பெற்றாக வேண்டும்.
தீக்கதிர் நாளிதழ் தலையங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக