மருத்துவப் படிப்புகளுக்கான, தேசிய தகுதி நுழைவுத் தேர்வால்,
கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்" என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள்
சங்க பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் கூறினார்.
"இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, தேசிய தகுதி
நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க
வேண்டும்" என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடந்த, 1ம் தேதி,
கடிதம் எழுதினார்.
முதல்வரின் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தும், மத்திய அரசை
கண்டித்தும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் உள்ள
அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள், நேற்று மனிதச் சங்கிலி போராட்டம்
நடத்தினர்.
சென்னையில் நடந்த போராட்டத்தில், சென்னை மருத்துவக் கல்லூரி,
எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள், 200க்கும்
மேற்பட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க
பொதுச் செயலர் பாலகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:
எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கான இடங்களில், 50 சதவீதம், அகில
இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்படுகிறது. மீதமுள்ள இடங்கள், தமிழக அரசு
நடத்தும் நுழைவுத் தேர்வின்படி, இட ஒதுக்கீடு முறையில் நிரப்பப் படுகிறது.
தற்போது இப்படிப்புகளுக்கு, அடுத்த மாதம் இறுதியில், தேசிய தகுதி நுழைவுத்
தேர்வு நடைபெற உள்ளது.
இதனால், மாநில அரசின் இட ஒதுக்கீடு முறைக்கு பாதிப்பு ஏற்படும்.
கிராமப்புற மாணவர்களை கருத்தில் கொண்டு தான், தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்.,
படிப்பிற்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதில், மத்திய அரசு
மீண்டும் நுழைவுத் தேர்வு முறையை கொண்டு வருவதால், கிராமப்புற ஏழை
மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர்.
தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு, மருத்துவப்
படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு
விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக