முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை திட்டம், அடுத்த கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பிற்கு நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி கூறினார்.கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி பேசியதாவது:கல்வி மேம்பாட்டிற்காக, தமிழக முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் தொடர்பாக, 15 அரசாணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தை, அடுத்த கல்வியாண்டில் (2013 - 14) ஒன்பதாம் வகுப்பிற்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பிற்கும் நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.
11/09/2012
முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தை, அடுத்த கல்வியாண்டில் (2013 - 14) ஒன்பதாம் வகுப்பிற்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பிற்கும் நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறியுள்ளார்.
லேபிள்கள்:
Educational News
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக