சென்னை: ஏற்கனவே, குரூப்-2 தேர்வில், கேள்வித்தாள், வெளியான ஆன விவகாரம், சமீபத்தில், தர்மபுரியில், டி.இ.டி., தேர்வில் எழுந்த சர்ச்சை ஆகியவற்றால், டி.என்.பி.எஸ்.சி., "திக்..திக்..." நிலையில் உள்ளது. நாளை நடக்கும் குரூப்-4 தேர்வில், எவ்வித பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, உறுப்பினர்களை, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது.
தேர்வாணைய தலைவராக நடராஜ் இருந்த போது, அவரின் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி, குரூப்-2 தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, வெளியானது. அதிர்ச்சி அடைந்த நடராஜ், அந்த தேர்வை ரத்து செய்து, புதிய தேர்வை நடத்தினார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நடந்த டி.இ.டி., தேர்வில், தர்மபுரி மாவட்டத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், நாளை நடக்கும் குரூப்-4 தேர்வில், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என, தேர்வாணையம், பதற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள தேர்வாணையம், தற்போது, தேர்வாணைய உறுப்பினர்களையும், கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தி உள்ளது.
உறுப்பினர்கள், ஒவ்வொருவருக்கும், தனித்தனி மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர்கள், இன்று, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு செல்கின்றனர். நாளை, தேர்வுப் பணிகளை, முழுமையாக பார்வையிட்டு, விடைத்தாள் கட்டுகளை, "சீல்" வைத்து, வாகனங்களில் எடுத்துச் செல்வது வரை, உறுப்பினர்கள் கண்காணிக்க உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக