கூட்டு போராட்டத்திற்கு கூவி கூவி நாம அழைத்தால் அதை பகிராமல் சில தோழர்கள் பங்காளி சண்டைக்கு வரிந்து கட்டிக்கொண்டடு முக நூலில் பதிவுகள் இடுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. பாவபப்பட்ட ஆசிரியன் வாழ்வாதரத்திற்கு போராடும்பொழுது வாரிசு சண்டையில் நான் துரோகியா? நீ துரோகியா? என்ற பட்டி மன்றம் நடக்குது. துரோகம் யார் செய்தாலும் அவரவர் மன நிலைக்கே விட்டுவிடுவோம். இனி நடக்கப்போவதை நல்லதாகவே நினைப்போம். அனைவரையும் அரவனைத்து செல்வதுதான் கூட்டு போராட்டத்தின் வெற்றியாக அமையும். கடந்த கால நினைவுகளை அசை போடுவதால் தர்ம சங்கட்டமே மிஞ்சும். ஒரு பக்கம் இயக்க தலைமைகளுக்கிடையில் ஈகோ. மற்ற பக்கத்தில் இயக்க பொறுப்பாளர்களிடம் கருத்துமோதல்கள். இடையில் நசுங்குவது என்னவோ இடைநிலை ஆசிரியனின் கோரிக்கைகள்தான். தனிச்சங்க நடவடிக்கை ஒரு புறம் இருந்தாலும் கூட்டு நடவடிக்கையே நாம் முன்னெடுக்க வேண்டும். தேவையில்லாத கருத்துக்களை பதிவிடுவதால் தேவையற்ற பின்னூட்டங்கள் ஒற்றுமைக்கு உலை வைத்துவிடும். கூட்டுப்போராட்டத்திற்கு சங்க தலைமைகளை வலியுறுத்துவதை விட்டுவிட்டு பங்காளி சண்டையிடுவதால் பயன் என்ன? என்பதை நண்பர்கள் சிந்திக்க வேண்டும். முகநூலில் வரும் பதிவுகள் அனைத்திற்கும் பின்னூட்டம் இட வேண்டிய அவசியமோ, அவசரமோ இல்லை. பின்னூட்டம் இடாததால் மற்றவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்றாகி விடாது. கடந்த கால வரலாறு அனைவரும் அறிந்ததே. அதை அம்பலத்தில் ஏற்றுவதால் ஆகிய பயன் என்ன? சொல்லிய சொல்லும், எழுதிய எழுத்தும் மீட்டெடுக்க இயலாது. எண்ணிக்கையில் அதிகம் இருக்கின்ற ஒரே காரணத்திற்காக தன்னுடைய உரிமைகளை இழந்து நிற்கின்ற பரிதாபத்துக்குறிய அறிவூட்டிகளின் நிலையை கருத்தில்கொண்டு கருத்து மோதல்களுக்கு முற்றுபுள்ளி வைப்போம். காரியம் கைகூட கைகோர்ப்போம். நம் கை இனைந்தால் கரம் வலுக்கும். கரம் வலுத்தால் காரியம் தானகவே முடியும். அதை விட்டுவிட்டு கீழ்த்தரமான விமர்சனங்களை பதிவிட்டு ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதை தவிர்ப்போம். சக ஆசிரியனை சகோதரராக ஏற்போம். சங்கம் வளர்ப்பது முக்கியமல்ல. சாதனை படைப்பதுதான் முக்கியம். ஒன்று கூடி எழுப்பப்போகும் கோஷங்கள் உரிமையை மீட்டெடுக்கும் வெற்றி ஓசையாக அமையட்டும். டிட்டோஜாக் அமைப்பை மீண்டும் கட்டமைப்போம். இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். இயக்கம் பாராமல் இணைவோம். தொடர்ந்து வெளியிடப்படும் பதிவுகளை மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்து களம் சூடு மாறாமல் பாதுகாப்போம். இறுதி வெற்றி நமதே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக