பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/07/2013

கல்வி உயர் அதிகாரிகளுடன் இயக்கப்பொறுப்பாளர்கள் சந்திப்பு

நேற்று 06.08.2013 அன்று மாலை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் மாவட்டத்தலைவர் திரு.முத்துப்பாண்டியன் தலைமையில் சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் திரு.சுப்பிரமணியன் அவர்களையும், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் திரு.கணேசமூர்த்தி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில் மாவட்டச்செயலாளர் திரு.தாமஸ் அமலநாதன், முன்னாள் மாவட்டச்செயலாளர் திரு.முத்துச்சாமி, மாவட்ட பொருளாளர் திரு.சிங்கராயர், சிவகங்கை நகரச்செயலாளர் திரு.சாஸ்தா சுந்தரம், சிவகங்கை கிளைச்செயலாளர் திரு.குமரேசன், மானாமதுரை தலைவர் திரு.இரமேஷ்குமார், செயலாளர் திரு.தங்கமாரியப்பன், திருப்புவனம் செயலாளர் திரு.சத்தியேந்திரன், பொருளாளர் திரு.வேதக்கண்ணு, காளையார்கோயில் திரு.சகாயதனிஷ், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் திரு.ஜான் கென்னடி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதன்மைக்கல்வி அலுவலர் திரு.செந்திவேல்முருகன் முக்கிய கூட்டத்தில் பங்கேற்க சென்றதால் சந்திக்க இயலவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக