புதுடெல்லி,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது அடிப்படை சம்பளத்தில் 80
சதவீதமாக உள்ளது. இதை 10 சதவீதம் உயர்த்தி, 90 சதவீதம் ஆக்க மத்திய அரசு
முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அளவுக்கு அகவிலைப்படி உயர்வு செய்து
இந்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது. இது ஜூலை 1&ந் தேதி முதல் அமலுக்கு
வரும். தொழிற்சாலை ஊழியர்களுக்கான இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்
(ஜூன் மாத நிலவரம்) திருத்திய மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி
வழங்கப்படுகிறது.
ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி வெளியிடப்பட்ட
புள்ளிவிவரங்களின்படி, தொழிலாளர்களுக்கான சில்லறை பண வீக்க விகிதம் (ஜூன்
நிலவரம்) 11.63 சதவீதம். ஜூலை மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்ட தற்காலிக
சில்லறை பண வீக்க விகிதம் 11.06 சதவீதமாக இருந்தது. திருத்திய மதிப்பீடு
வந்து விட்டதால் அதன்அடிப்படையில் நிதித்துறை அமைச்சகம் ஒரு திட்ட
முன்வடிவை தயாரித்து அதை மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பும்.
3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இரட்டை இலக்க சதவீத அகவிலைப்படி உயர்வு
செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2010 செப்டம்பர்
மாதம்தான், இரட்டை இலக்க அளவாக 10 சதவீத அகவிலைப்படி உயர்வு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
மத்திய அரசின் 10 சதவீத
அகவிலைப்படி உயர்வினால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம்
ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். பண்டிகைக்காலம் தொடங்கவுள்ள நிலையில்
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் மத்திய அரசு
ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது அடிப்படை சம்பளத்தில் 80 சதவீதமாக உள்ளது. இதை 10 சதவீதம் உயர்த்தி, 90 சதவீதம் ஆக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அளவுக்கு அகவிலைப்படி உயர்வு செய்து இந்த மாதம் அறிவிப்பு வெளியாகிறது. இது ஜூலை 1&ந் தேதி முதல் அமலுக்கு வரும். தொழிற்சாலை ஊழியர்களுக்கான இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் (ஜூன் மாத நிலவரம்) திருத்திய மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, தொழிலாளர்களுக்கான சில்லறை பண வீக்க விகிதம் (ஜூன் நிலவரம்) 11.63 சதவீதம். ஜூலை மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்ட தற்காலிக சில்லறை பண வீக்க விகிதம் 11.06 சதவீதமாக இருந்தது. திருத்திய மதிப்பீடு வந்து விட்டதால் அதன்அடிப்படையில் நிதித்துறை அமைச்சகம் ஒரு திட்ட முன்வடிவை தயாரித்து அதை மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பும்.
3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இரட்டை இலக்க சதவீத அகவிலைப்படி உயர்வு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2010 செப்டம்பர் மாதம்தான், இரட்டை இலக்க அளவாக 10 சதவீத அகவிலைப்படி உயர்வு செய்யப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
மத்திய அரசின் 10 சதவீத அகவிலைப்படி உயர்வினால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். பண்டிகைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக