இன்று சென்னை உயர்நீதிமன்றம் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்குரைஞர்கள் பிரகாஷ் மற்றும் முத்து குமாரசாமி ஆகியோர் வாதிட்டனர். அதன் பின் அரசு வழக்குரைஞர் தன் வாதத்தை தொடர்ந்தார். இரட்டைப்பட்டம் சார்பாக வழக்குரைஞர்களின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அரசு தரப்பு தன் வாதத்தை வருகிற 25.11.2013 திங்கள் கிழமை தொடர உள்ளது. அன்று மூன்று வருட பட்டப்படிப்பு சார்பாக வழக்கறிஞர்கள் வாதாட உள்ளனர். அதன் பின்பே தீர்ப்பு வெளி வரும். ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழ்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தகவல் பகிர்வு: தோழர் கலியமூர்த்தி@சென்னை உயர்நீதி மன்றம்.
தகவல் பகிர்வு: தோழர் கலியமூர்த்தி@சென்னை உயர்நீதி மன்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக