பள்ளிகள் திறந்து ஆறு மாதங்காகியும்,
பாதுகாவலர் நியமிக்கப்படாததால், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பாதுகாவலர்
நியமிக்கும் திட்டம் முடங்கியுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் 56 ஆயிரம் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை, பள்ளியில் சேர்ப்பதற்காக எஸ்.எஸ்.ஏ., மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு புதிதாக 54 துவக்கப் பள்ளிகள் துவக்கப்பட்டன. மேலும் பேருந்து வசதி இல்லாத மலை, காடு பகுதிகளில் வசிக்கும் பள்ளி செல்லா குழந்தைகளை, பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பாதுகாவலர் நியமிக்கும் திட்டத்தை அரசு அறிவித்ததது.
முதல் கட்டமாக திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 151 குடியிருப்புகளை சேர்ந்த 3,750 குழந்தைகளுக்கு, செயல்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதில் பாதுகாவலர்களை நியமிக்க, ஒரு குழந்தைக்கு ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.1.12 கோடியை அரசு ஒதுக்கியது. ஆனால், பள்ளிகள் திறந்து 6 மாதங்களாகியும், பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக