நாடு முழுவதும் புதிதாக 58 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு
அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான ஒப்புதல், நேற்று நடைபெற்ற மத்திய
மந்திரிசபையின் பொருளாதார விவகார குழு கூட்டத்தில் வழங்கப்பட்டது. ஒவ்வொரு
கல்லூரியும் தலா ரூ.189 கோடி செலவில் அமைக்கப்படும். இதில் 75 சதவீதத்தை
மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசுகளும் வழங்கும்.
ஒவ்வொரு புதிய கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தலா 100 இடங்கள் வீதம், 58 கல்லூரிகளிலும் மொத்தம் 5,800 மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைக்கும். புதிய கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரிகளின் தரமும் உயர்த்தப்படும் என்று, பேட்டியின்போது நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
நாடு முழுவதும் தற்போது உள்ள 381 மருத்துவ கல்லூரிகளில், இந்திய மருத்துவ கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ் ஏறத்தாழ 50 ஆயிரம் மருத்துவ இடங்கள் உள்ளன. டாக்டர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களில் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக