சிவகங்கை, : சிவகங்கையில் ஏழு அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோஜாக்) சார்பில் பேரணி நடந்தது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தாமஸ்அமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மயில் பேரணியை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் செல்வக்குமார், இராஜா, அந்தோணிசேவியர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும் நிர்ணயித்திட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். தொடக்க கல்வித்துறையில் தமிழ் வழிக்கல்வி தொடர்ந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடந்தது.
அரண்மனை வாசலில் தொடங்கிய பேரணி கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்ட
னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக