மத்திய அரசுக்கு இணையான ஊதியம் சாதாரண இடைநிலை
ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7அம்சக் கோரிக்கைகளை
வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு
நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சார்பில் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகங்கை அரண்மனைவாசல் அருகே நடைபெற்ற இப்பேரணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆ.தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் ப.செல்வக்குமார், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கா.ராஜா, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆர்.அந்தோணி சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை துவக்கி வைத்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ச.மயில் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தொடக்க கல்வித் துறையில் தமிழ்வழி கல்வி முறை தொடர்ந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக