சிவகங்கை: மத்திய அரசுக்கு இணையான சம்பளம், ஆசிரியர் தகுதித் தேர்வை
ரத்து செய்ய வலியுறுத்தல் உட்பட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி,
டிட்டோஜாக்- அமைப்பு சார்பில், சிவகங்கையில், பேரணி நடந்தது. ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் மயில் துவக்கி வைத்தார். ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தாமஸ் அமலநாதன், தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாவட்டசெயலாளர் அந்தோணி சேவியர் ஆகியோர் பங்கேற்றனர். பேரணி,
அரண்மனைவாசலில் துவங்கி, காந்திவீதி வழியாக, கலெக்டர் அலுவலகம் சென்றது.
அங்கு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
Source: Dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக