"பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, வரும், 21ம் தேதி துவங்கும்" என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 24ல் துவங்கும். ஏப்ரல், 15ம் தேதிக்குள், விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க வேண்டும் என ஆசிரியர்களிடம் தெரிவித்து உள்ளோம். இந்த பணியில் 50 ஆயிரம் ஆசிரியர், இதர ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும். ஏப்ரல் 15க்குள் இந்த பணி முடிந்தால் அதற்கு அடுத்த கட்ட பணிகள் முடிய, மேலும் 15 நாள் ஆகும்.
எனவே கடந்த ஆண்டைப்போல், மே முதல் வாரத்தில், தேர்வு முடிவை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, மே 9ம் தேதி தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு மிக விரைவாக, விடைத்தாள் திருத்தும் பணி முடியும் பட்சத்தில், ஒரு வாரம் முன்னதாக முடிவு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக