டில்லி: நெட் தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு
மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான விதிமுறையை சற்று தளர்த்தும்
செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவர்கள்
இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது.
அதுதொடர்பாக
கூறப்படுவதாவது: நெட் தேர்வை எழுதும் OBC பிரிவு மாணவர்கள், தேர்வில்
தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டுமெனில், குறைந்தபட்சம் 60%
மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், தற்போதைய புதிய முடிவின்படி, அவர்கள்
55% பெற்றாலே போதுமானது.
இதன்மூலம், SC/ST பிரிவு மாணவர்களுக்கு
ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 55% மதிப்பெண் சலுகையோடு, இந்த புதிய சலுகையும்
இணைந்து, சமமாகிறது. ஆசிரியர் பணியிடங்களில், SC/ST மற்றும் OBC
பிரிவினருக்கான பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பதை மனதில்
வைத்தே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
நாடெங்கிலும் உள்ள மத்தியப் பல்கலைகளில்
காலியாக இருக்கும் 40% பணியிடங்களில், அதிகளவில் SC/ST மற்றும் OBC
பிரிவினருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பாக,
ஏற்கனவே நீதிமன்றம் சென்ற ஒரு வழக்கின் அடிப்படையிலேயே இந்தப் புதிய முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக