உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றதாக கூறி, தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்' செய்தார்.
மதுரை: மதுரை மாவட்டம், மேலுார் அருகே கீரனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளித் தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இப்பள்ளி மாணவர்களை இவர்கள், சில நாட்களுக்கு முன் உரிய அனுமதியின்றி திருச்சிக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றனர். அப்போது நடந்த விபத்து ஒன்றில், மாணவர் ஒருவர் இறந்தார். 12 பேர் காயமுற்றனர். இச்சம்பவம் தொடர்பாக, உரிய அனுமதி பெறாமல் அழைத்துச் சென்றதாக கூறி, தலைமையாசிரியை பாரதிமலர், உதவி ஆசிரியை செந்தில்ராணியை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் 'சஸ்பெண்ட்' செய்தார். சங்கங்கள் அதிருப்தி: 'மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல, கல்வி அதிகாரி ஒருவர் வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக