அறிவியல், பொறியியல் மாதிரி சாதனங்கள் (புராஜெக்ட்ஸ்) வடிவமைப்பது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி முகாம் சென்னை கிண்டியில் உள்ள அறிவியல் நகரம் கலையரங்கில் ஏப்ரல் 5-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த முகாமுக்கு தமிழக அரசின் அறிவியல் நகரம் (சயின்ஸ் சிட்டி) ஏற்பாடுசெய்திருக்கிறது.
இதில், மாதிரி சாதனங்கள் வடிவமைப்பது, அவற்றை தேசிய, சர்வதேச கருத்தரங்குகளில் கண்காட்சிக்கு வைப்பது, அதற்கான யுக்திகள் குறித்து இந்த முகாமில் யோசனைகள் வழங்கப்படும். மாணவர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் பெற்றோருக்கும் முகாம் பயனுள்ளதாக இருக்கும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், பெற்றோர் தங்கள் பெயரை 4-ம் தேதிக்குள் (வெள் ளிக்கிழமை) முன்பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-24454054, 24454034 ஆகிய எண்களில் அல்லது 98413-18440, 80561-00293 ஆகிய செல்போன் எண்களிலோ தொடர்புகொள்ளலாம் என்று அறிவியல் நகரம் அமைப்பின் துணைத்தலைவர் எம்.குற்றாலிங்கம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக