பள்ளியில் ஒருவர் நல்ல ஆசிரியராக உருவாக வேண்டுமென்றால் அவர் பாடத்தை நடத்தக்கூடாது. புரிந்துகொள்ளச் செய்ய வேண்டுமென்றார்; கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆயிரம் ஆயிரம் உரையாடல் என்கிற பொதுத் தலைப்பின் கீழ் பல்வேறு விவாத அரங்குகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதனொரு பகுதியாக ‘கல்வியும் சவால்களும்’ என்ற தலைப்பில்; புதுக்கோடடையில் ஞாயிரன்று நடைபெற்றது. இதில் உரையாடிய தமிழ்நாடு பொதுக்கல்விக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மேலும் பேசியதாவது:
சம்ச்சீர் கல்விக்காக பல்வேறு அமைப்புகள் நீண்ட காலமாகப் போராடி வந்துள்ளன. 2006-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு; மூன்றாண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்தது. இக்கோரிக்கையை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினரை காண்டுமிராண்களைப் போல அடித்து நொறுக்கியது காவல்துறை. சட்டமன்றத்தில் இதுதொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பிறகுதான் வேண்டா வெறுப்பாக சமச்சீர் கல்வி அமுல்படுத்தப்பட்டது. அந்த வகையில் சமச்சீர் கல்வியின் கதாநாயகன் இந்திய மணவர் சங்கம்.
ஆனாலும் அது உண்மையான சமச்சீர் கல்வி அல்ல. நான்கு வகையான வாரியங்கள் எதையும் களைக்காமலேயே பொதுக்கல்வி வாரியதை உருவாக்கினார்கள். அதில் 7 இயக்குனர்கள், 3 கல்வியாளர்கள் தவிர மெட்ரிக், ஆங்கிலோ இன்டியன், ஓரியண்டர் பள்ளிகளிலிருந்து தாலா ஒருவர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். இதில் ஒருவர்கூட அரசுப் பள்ளிகளிலிருந்தோ, அரசு உதவி பெறும் பள்ளிகளிலி ருந்தோ உறுப்பினராகச் சேர்க்கப்படவில்லை. பிறகு எங்கிருந்து வந்தது சமச்சீர் கல்வி. என்ற போதும் ஒரே பாடத் திட்டத்திற்காகவும், முழுமையான சமச்சீர் கல்விக்கான முதல் படி என்பதாலும் ஏற்றுக் கொண்டோம்.
உண்மையான ஆசிரியர் பாடத்திட்டத்தை நடத்தக்கூடாது. அவர் ஒரு செயல்பாட்டாளராக இருக்க வேண்டும். பாடத்தை மாணவர்கள் தாங்களாவே படித்து புரிந்து கொள்ளும் வகையில் தயார்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் பதில் சொல்பவர்களாகவும் மாணவர்கள் கேள்வி கேட்பவர்களாகவும் மாற வேண்டும். கேள்வி கேட்கும் மாணவர்கள்தான் புரிந்து கொள்வார்கள். புரிந்து கொள்பவர்கள் சிந்திப்பார்கள். சிந்தனை யாளர்கள்தான் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார்கள். அப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள்தான் மக்களின் வலியை போக்கக்கூடியதாக இருக்கும். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தனது பேச்சில் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக