தேர்தலில் நடைபெற்ற விரும்பதகாத நிகழ்வுகள் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட .நிர்வாகிகள் சந்தித்து புகார் தெரிவித்தனர். அதில் குறிப்பாக எஸ்.புதூர் ஒன்றியம் செட்டிக்குறிச்சி தலைமையாசிரியரை தரக்குறைவாக பேசிய வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்தும், செட்டிக்குறிச்சி தலைமையாசிரியரும், எஸ்.புதூர் வட்டாரச் செயலாளருமான திரு.சுதர்சன் அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட குறிப்பாணை குறித்தும் இயக்கம் தன்னுடைய கடுமையான அதிர்ப்தியை தெரிவித்தது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்டதையும், சிவகங்கை காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆசிரியர்களை தரக்குறைவாக பேசிய வருவாய் துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் இயக்கம் வலியுறுத்தியது. நமது நியாயமான கோரிக்கையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக நம் முன்னே குறிப்பணையை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும் மற்ற கோரிக்கை குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இச்சந்திப்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திரு.குணசேகரன், சிவகங்கை மாவட்டத்தலைவர் முத்துப்பாண்டியன், மாநிலத் துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாவட்ட செயலாளர் தாமஸ் அமலநாதன் மற்றும் வட்டார, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக