தமிழகம்
முழுவதும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் வேறு
பள்ளிகளில் நியமிக்க கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்திலுள்ள பல அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாசாரத்தைவிட
கூடுதல் ஆசிரியர்கள் (பாடவாரியாக தேவைப்படும் ஆசிரியர்களைவிட கூடுதல்
எண்ணிக்கையில்) உள்ளனர். இந்நிலையில், கூடுதல் ஆசிரியர்களை பணி நிரவல் மூல<ம்
வேறு பள்ளிகளுக்கு மாற்ற கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி தமிழகம்
முழுவதும், கூடுதல் ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள் மற்றும் உபரி
ஆசிரியர் விவரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் கல்வித் துறை
தயாரித்துள்ளது. 31-5-2014 நிலவரப்படி, உபரியாக உள்ள ஆசிரியர்களின்
பட்டியல், கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகள், பள்ளிகளில் ஏற்கெனவே
காலியாக உள்ள பணியிடங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாகத் தயாரித்து அனுப்புமாறு
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக