இன்று பள்ளி ஆய்வு செய்யப்பட்டது' என்று குறிப்பிடுவது மட்டும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணி அல்ல," என, கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார். மதுரை சி.இ.ஓ., அலுவலகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கூடுதல் சி.இ.ஓ., பார்வதி தலைமையில் நடந்தது.
இதில், அமுதவல்லி பேசியதாவது: தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் 'வாசிப்பு' மற்றும் 'எழுதும் திறன்' குறிப்பிடும் வகையில் இல்லை. இதை கண்காணித்து மேம்படுத்த வேண்டிய பொறுப்பு, ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உண்டு. ஆய்வுக்கு செல்லும்போது 'இன்று பள்ளி ஆய்வு செய்யப்பட்டது' என்று மட்டும் பலர் பதிவேட்டில் எழுதிவிட்டு சென்று விடுகின்றனர். மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றால், அந்த பள்ளியில் பாடம் நடத்தி, மாணவர்கள் திறனை ஆய்வு செய்ய வேண்டும், என்றார். முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், "ஆசிரியர்களின் இயலாத்தன்மையால் தான் மாணவர்கள் இடைநிற்றல் ஏற்படுகின்றன. இதற்கு, ஆசிரியர்கள் எந்த காரணமும் கூறக்கூடாது. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால் மாணவர் கல்வித் திறன் மேம்படும்," என்றார்.டி.இ.ஓ.,க்கள் ஜெயமீனாதேவி, சங்கரநாராயணன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கோவிந்தராஜன், டி.இ.இ.ஓ., சுப்பிரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷீலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக