பெரம்பூர் மதுரை மாடசாமி தெருவை சேர்ந்தவர் சுமதி (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெரம்பூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். சுமதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம் மீண்டும் பள்ளிக்கு சென்றார். அப்போது, வகுப்பு ஆசிரியை ஏன் 2 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என கேட்டுள்ளார். அதற்கு உடல்நிலை சரியில்லை என சுமதி கூறியுள்ளார். உடனே, உதவி தலைமை ஆசிரியையிடம், மாணவியை அழைத்து சென்றார். அங்கு, பள்ளிக்கு ஏன் வரவில்லை என கூறி, உதவி தலைமை ஆசிரியை, ஸ்கேலால் சுமதியின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து வெளியே வந்த மாணவி, முதல் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில், அவரது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். உடனடியாக பள்ளி ஊழியர்கள், அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாய் மருத்துவமனைக்கு வந்தார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து, செம்பியம் இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டி, எஸ்ஐ சையத் முபாரக் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மாணவி சுமதியிடம் விசாரித்தனர். அதில், வகுப்பு ஆசிரியை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அடித்தார்.
பின்னர், உதவி தலைமை ஆசிரியையிடம் அழைத்து சென்றபோது, அவரும் ஸ்கேலால் அடித்தார். இதனால், அவமானம் அடைந்த நான் மாடியில் இருந்து குதித்தேன் என மாணவி போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி உதவி ஆசிரியர், வகுப்பு ஆசிரியை ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். ஆசிரியை, தலைமை உதவி ஆசிரியை அடித்ததால், மாடியில் இருந்த மாணவி குதித்த சம்பவம், மற்ற மாணவிகளின் பெற்றோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக